Home /News /tamil-nadu /

திமுக பிரமுகரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மீட்ட தஞ்சை மாநகராட்சி!

திமுக பிரமுகரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மீட்ட தஞ்சை மாநகராட்சி!

மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை  ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகளை விதிகளை மீறி நடத்தி வந்தனர். 

தஞ்சையில் திமுக பிரமுகரிடம் இருந்து மாநகராட்சி மீட்ட ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தில் கட்டப்பட இருந்த கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 44ஆயிரம் சதுரஅடி  நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில் பாரம்பரியமிக்க சுதர்சன சபா என்கிற நாடக சபை இருந்தது. இந்த சபை 100ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்தும், அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை  ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகளை விதிகளை மீறி நடத்தி வந்தனர்.

கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி.. இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது!

மேலும் ஒப்பந்த தொகையான ரூ.20 கோடியும் மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் கடந்த 15 நாட்கள் முன்பே இடத்தை நீதிமன்ற உத்தரவுபடி கைப்பற்றினர். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த  கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 100 கோடி என கூறப்படுகிறது.
Published by:Esakki Raja
First published:

Tags: Thanjavur

அடுத்த செய்தி