தட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றம்!

தடுப்பூசி தட்டுப்பாடு

தடுப்பூசி குறித்த தொடர் விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி செலுத்திகொள்ள அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் தடுப்பூசி வராததால் நீண்ட நேரமாக காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

  • Share this:
கும்பகோணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் வந்த நிலையில், தடுப்பூசி இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்  சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக  தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை, இதனால் பொதுமக்கள் முகாம்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இ

ந்நிலையில் இன்று கும்பகோணம் நகராட்சி சார்பில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்துபவர்களுக்காக  கும்பகோணம் காரனேசன் மருத்துவமனை, யானையடி பள்ளி, சரஸ்வதி பாடசாலை பள்ளி, மஸ்ஜித் நூர் பள்ளிவாசல், மேலக்காவிரி பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தடுப்பூசி குறித்த தொடர் விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி செலுத்திகொள்ள அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் மருத்துவமனையின் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மருத்துவமனை வெளியில் சமூக இடைவெளி இன்றி ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மருத்துவமனை கதவு திறக்கப்படாமல் இருப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது, தஞ்சையில் இருந்து கும்பகோணம் முகாம்களுக்கு வரவேண்டிய 1,070 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இதுவரை வந்து சேரவில்லை எனவே தடுப்பூசிகள் வந்த பின்பு கதவு திறக்கப்படும் என தெரிவித்தனர்.

பின்னர்  அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே கதவு திறக்கப்பட்டு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்று சமூக இடைவெளி இன்றி வரிசையில் காத்திருந்தனர்.இந்நிலையில்  தஞ்சையிலிருந்து தடுப்பூசிகள் வந்து சேராததால் நீண்ட நேரமாக பொது மக்கள் வரிசையில் காத்து நிற்கும் அவலம் ஏற்பட்டது.

இதையும் படிங்க.. விடுதலை அல்லது கருணைக்கொலை: சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!..
Published by:Murugesh M
First published: