ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி: சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நோயாளிகள்

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி: சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நோயாளிகள்

தஞ்சை மருத்துவ கல்லூரி

தஞ்சை மருத்துவ கல்லூரி

மதுசேகர், ஷோபனா ஆகிய இரண்டு பேர் கொரோனா  பரிசோதனை செய்துள்ளனர். இதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுகாதார துறையினர் மதுசேகரை மட்டும் தொடர்பு கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தஞ்சாவூரில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் ஏற்படும் குளறுபடி காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

  தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க மாநிலம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை  முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சிறிது குறைந்தபோதிலும், தொடர்ந்து 30 ஆயிரத்துக்கு மேலாகவே பரவிவருகிறது.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போதுவரை 44 ஆயிரத்து 93 பேர் தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 493 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.  தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

  இந்நிலையில், கடந்த  22ம் தேதி  தஞ்சாவூர் அருகே உள்ள 8 மணகரம்பை பகுதியை சேர்ந்த மதுசேகர், ஷோபனா ஆகிய இரண்டு பேர் கொரோனா  பரிசோதனை செய்துள்ளனர். இதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுகாதார துறையினர் மதுசேகரை மட்டும் தொடர்பு கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்.

  தொற்று பாதிப்புக்கு உள்ளான ஷோபானாவிற்கு நான்கு நாட்கள் ஆகியும் அழைப்பு வரவில்லை, இதனால் அவரின் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது தங்களுக்கு ஷோபனா பாதிக்கப்பட்டு போல் எந்த முடிவுகளும் வரவில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் ஷோபனாவின் தொலைபேசி எண்ணை கொண்டு சோதனை செய்து போது அதிக தொற்று உறுதி என முடிவுகள் வந்துள்ளது.

  இதுவரை சுகாதார அதிகாரிகள் ஷோபனவை தொடர்பு கொள்ளாததால், தொற்று பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இதுபோல் கொரோனா முடிவுகளின் குளறுபடியால் பொதுமக்கள் பாதிக்கபடுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர்: குருநாதன்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona, COVID-19 Test, Thanjavur