தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு: சிறந்த நகராட்சி உதகை!

சிறந்த மாநகராட்சி

இந்த ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக  தஞ்சாவூர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றும் சுதந்திர தின விழாவில் இதற்கான விருது மற்றும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

 • Share this:
  தமிழகத்தின் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், தேர்வு செய்யப்படும் மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றுக்கு சுதந்திர தினத்தின்போது விருதும் பரிசும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.நகராட்சியாக தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை முறையே தேர்வு செய்யப்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக  தஞ்சாவூர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றும் சுதந்திர தின விழாவில் இதற்கான விருது மற்றும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை ஆகியவற்றை தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கவுள்ளார்.

  மேலும் படிக்க: திருச்சியைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரரின் 6 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது


  மேலும், சிறந்த நகராட்சியான முதல் பரிசுக்கு உதகமண்டலமும், இரண்டாம் பரிசுக்கு திருச்சங்கோடு மற்றும் மூன்றாம் பரிசுக்கு சின்னமானுர் தேர்வாகியுள்ளன. இவற்றுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

  சிறந்த பேரூராட்சியான முதல் பரிசுக்கு திருச்சியின் கல்லக்குடி, இரண்டாம் பரிசுக்கு கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மூன்றாம் பரிசுக்கு சிவகங்கையின் கோட்டையூர் தேர்வாகியுள்ளன.

  மேலும் படிக்க: டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள் - சாலையில் படுத்து தடுத்த விவசாயி

  Published by:Murugesh M
  First published: