தஞ்சாவூர் சப்பரம் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரண தொகையையும் வழங்கினார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு சப்பர உலா நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக சப்பரம் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலையை கடப்பதற்குள் தீவிர பிரசவ வலி.. 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!
தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழக அரசின் நிவாரண தொகையான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.