போலீஸ் விசாரணையில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்த சகோதரி

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர்

விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் காவலர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரனை நடத்தினார்.

  • Share this:
தஞ்சையில் காவல் துறை விசாரணையில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சாமிநாதன் வீட்டில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூபாய் 6 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி அருகேயுள்ள புதுப்பட்டினம் பழைய முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணன் (34), சென்னையை சேர்ந்த  அப்துல், தஞ்சாவூரை சேர்ந்த சூர்யா ஆகிய மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையினர் பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகேயுள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read:  முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மாப்பிள்ளையை மிரட்டி பணம் பறிப்பு - கேரள பெண்கள் கைது

இந்த விசாரணைக்கு இடையே சத்தியவாணன் அதிகாலை உயிரிழந்தார். இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதையடுத்து தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சத்தியவாணன் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் பல்வேறு மாவட்டங்களில்  உள்ளன. எனவே, குற்றச் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள சத்தியவாணனின் விரல்ரேகைப் பதிவு காவல் துறையிடம் உள்ளது. இந்தப் பதிவும், சாமிநாதன் வீட்டில் பதிவான விரல்ரேகையும் ஒத்துப்போனதாகவும், அதன் அடிப்படையில் சத்தியவாணனைப் பிடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Also Read:  3 கோடி பேரம்.. இன்னோவா காருடன் கடத்தப்பட்ட ரைஸ்மில் அதிபர் மகன் - கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கிய பின்னணி

விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா ஆகியோர் சுமார் ஆறு மணி நேரந்திற்கு மேல் சம்பந்தப்பட்ட காவலர்களிடம்  விசாரணை நடத்தினர்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தினர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176ன் (காவல் துறை விசாரணையின்போது உயிரிழப்பு) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்தியவாணின் சகோதரி சண்முகப்ரியா, உறவினர் ஜெயபாலிடம் ஆகியோரிடம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முகமது அலி தனியாக விசாரணை நடத்தினார். இதனையடுத்து மாலை நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சத்தியவாணின் உடற்கூறாய்வு நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் சத்யவாணின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல விருப்பமில்லை என்றும், எனவே அவரது உடலை இங்கே காவல்துறை முன்பு தகனம்  செய்ய வேண்டும் என அவரது சகோதரியும் உறவினர்களும் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பிறகே சத்தியவானின் இறப்பு குறித்து தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: