Home /News /tamil-nadu /

தஞ்சை மாநகரம் முழுவதும் ஒலிக்கும் திருக்குறள்..!

தஞ்சை மாநகரம் முழுவதும் ஒலிக்கும் திருக்குறள்..!

தஞ்சை மணிக்கூண்டு

தஞ்சை மணிக்கூண்டு

உலகப் பொதுமறையான திருக்குறள் ஒவ்வொரு மணிநேரமும் இசைக்கப்படுவது தஞ்சை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சையில் ஒவ்வொரு மணி நேரமும் இசைக்கும் மணிக்கூண்டு நேரத்தை இசைத்த பிறகு, சில வினாடிகளில் திருக்குறள் இசைக்கும்படி செய்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில், நாயக்கர்கள் கட்டிய அரண்மனை என புராதன சின்னங்கள் உள்ள நகரம் தஞ்சை மாநகரம் ஆகும். இதேபோல் ராஜப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட மணிக்கூண்டு தஞ்சையின் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மணிக்கூண்டு இராசா மிராசுதாரர் மருத்துவமனையின் அருகே அமைந்துள்ளது. 1,883 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி முடிசூடியதை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்த மணி கூண்டை அமைக்க தஞ்சை நகராட்சிக்கு அப்போதைய மராட்டிய ராணி நிதி கொடுத்ததால், ராணிஸ் டவர் என்று அழைக்கப்பட்டது. 130 அடி உயரம் கொண்ட இந்த மணி கூண்டில் முதலாம் உலகப்போரில், தஞ்சையில் இருந்து கலந்து கொண்ட 61 பேரில், 4 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி அடங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2 கோடியே 36 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தற்போதைய மாநகராட்சி ஆணையராக இருக்கும் சரவணக்குமார்  மணிக்கூண்டில் ஒரு புதுமையை புகுத்தி உள்ளார். ஒவ்வொரு மணி நேரமும் இசைக்கும் மணிக்கூண்டு நேரத்தை இசைத்த பிறகு, சில வினாடிகளில் திருக்குறள் இசைக்கும்படி செய்துள்ளார். மேலும் அந்த திருக்குறளுக்கு விளக்க ஒலியும் அமைக்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறள் ஒவ்வொரு மணிநேரமும் இசைக்கப்படுவது தஞ்சை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Tamilnadu, Tanjore, Thirukkural

அடுத்த செய்தி