முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும்  தஞ்சை பெரியகோயில்

இராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும்  தஞ்சை பெரியகோயில்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

  • Last Updated :

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான,  உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் கொண்டாப்படும். அதேபோல் இந்தாண்டு 1036 வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார், அதனை தொடர்ந்து பெருவுடையாருக்க 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.   சதய விழா  முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார். ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவானது கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Rajarajacholan, Tanjore, Tanjore temple