• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உங்கள் மகள் இந்த ஆண்டும் 11-ம் வகுப்புதான் படிக்க வேண்டும்: தஞ்சாவூரில் 12-ம் மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் அலைக்கழிக்கும் நிர்வாகம்

உங்கள் மகள் இந்த ஆண்டும் 11-ம் வகுப்புதான் படிக்க வேண்டும்: தஞ்சாவூரில் 12-ம் மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் அலைக்கழிக்கும் நிர்வாகம்

தஞ்சாவூர் பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவி

தஞ்சாவூர் பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவி

தஞ்சாவூரில் 12-ம் வகுப்பு மாணவியை மீண்டும் 11-ம் வகுப்பு படிக்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் கோரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாணவி துர்கா. இவர் மகர்நோம்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மாணவியின் பெற்றோர்களை அழைத்த பள்ளி நிர்வாகம், இந்த ஆண்டு உங்கள் மகள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது எனவும்,மீண்டும் பதினோராம் வகுப்பு தான் படிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகம் உங்கள் மகளின் நாமினல் ரோல் நம்பர் பதிவு செய்யவில்லை. கடந்தாண்டே விடுபட்டு உள்ளதாகவும் எனவே இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் 11ஆம் வகுப்பு சேர்ந்தற்க்கான கல்வி கட்டணம் 4,000 ரூபாய்  கட்டியுள்ளதாகவும், கடந்தாண்டு தனது மகள் பதினோராம் வகுப்பிற்கான அனைத்து ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளார். இப்போது வந்து பதிவு செய்யவில்லை என்று கூறுகிறீர்களே என அதிர்ச்சியுடன் கேட்டடுள்ளனர்.

மேலும் பதிவு எண் மட்டும் எப்படி  விட்டுப் போகும் என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், கடந்த 2020ஆம் ஆண்டு இதே பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்தேன். அதற்கான கட்டணங்களை முழுமையாக  கட்டி ஓராண்டு பள்ளியில் படித்துள்ளேன்.

ஆனால் இந்தாண்டு 12-ஆம் வகுப்புக்கு செல்ல அனுமதி மறுக்கின்றனர். பள்ளி திறந்து 2 மாதமாகியும் தன்னை பன்னிரண்டாம் வகுப்பில் அனுமதிக்கவில்லை, எனவும் மேலும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. கேட்டால் தன்னை பதிவு செய்யவில்லை எனவும் அலட்சியமாக கூறுகின்றனர்.

இதனால் ஒரு வருடம் வீணாகி போய்விட்டது என அவர் கண்ணீர் சிந்துகிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: