• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.. பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம்

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.. பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது.

  • Share this:
    இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.

    உலகப் புகழ்பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரியகோவிலை கட்டிய, மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம் ஆண்டுதோறும்  சதய விழாவாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டு 1036 - வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. கொரோனா காரணமாக  கோவில் பிரகாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் தருமை ஆதினம் இருபத்தி ஏழாவது  ஸ்ரீலஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானிதேசிக சுவாமிகள் பங்கேற்று நடத்த உள்ளார்.தொடர்ந்து பல்வேறு கட்சியினர்,  அமைப்பினர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

    Also Read: சதய விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும்  தஞ்சை பெரியகோயில்

    ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படும் சதய விழா, இந்த ஆண்டு கொரோனா  காரணமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது, மேலும் சதய விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: