Home /News /tamil-nadu /

மாஸ் காட்ட நினைத்து மாட்டிக்கொண்ட தனியார் பேருந்து.. மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஓட்டுநர்

மாஸ் காட்ட நினைத்து மாட்டிக்கொண்ட தனியார் பேருந்து.. மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஓட்டுநர்

தஞ்சாவூர் தனியார் பேருந்து

தஞ்சாவூர் தனியார் பேருந்து

பேருந்து மழைநீரில் சிக்கிக்கொண்டதால் இறங்கமுடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட தனியார் பேருந்து. 30 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி மீட்பு. ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதம்.

தஞ்சையில் இன்று பிற்பகல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சை ரயில் நிலையம் அருகே கீழ்பாலத்தில் மழைநீர் சுமார் மூன்று அடி உயரத்திற்கு தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் அரசு பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை மேரீஸ்கார்னர் மேம்பாலம் வழியாக சுற்றி கொண்டு சென்றது. இந்நிலையில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபரீதத்தை உணராமல் கீழ்பாலம் வழியாக சென்றதால் மழைநீரில் சிக்கிக்கொண்டு நடுவழியில் நின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் பெண்கள், குழந்தைகள் கூச்சலிட்டனர். மேலும் பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்தனர். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் டிராக்டர் மூலம் கயிறு கட்டி தனியார் பேருந்தை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் விபரீதம் அறியாமல் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Bus, Heavy rain, Tanjore

அடுத்த செய்தி