• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சையில் பச்சிளங்குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக துண்டித்த நர்ஸ்..

தஞ்சையில் பச்சிளங்குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக துண்டித்த நர்ஸ்..

குழந்தை

குழந்தை

இந்த விவகாரத்தில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், செவிலியர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்ட ஊசியை எடுப்பதற்குப் பதிலாக, கட்டை விரலை செவிலியர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான கணேசன், ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 9 மாதத்திலேயே குழந்தை பிறந்ததால், வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறிய மருத்துவர்கள், குளுக்கோஸ் ஏற்றிவந்தனர்.

Also Read: பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து..

இந்நிலையில், குழந்தை நலம்பெற்றதை அடுத்து, வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ஊசியை அகற்றுமாறு செவிலியர்களிடம் பெற்றோர் கூறியுள்ளனர். அப்போது, ஊசியுடன் பேண்டேஜை கத்தரிக்கோல் மூலம் அகற்றியபோது, கட்டை விரலை செவிலியர் வெட்டி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டைவிரலை கையிலேயே வைத்திருப்பதாகவும், நாளைக்குள் சரியாகாவிட்டால் பிளாஸ்டிக்கை வைத்து ஒட்டுவோம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.



இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் முதல்வர் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், குழந்தை கையை ஆட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதாக தெரிவித்தார். கை விரலில் தையல் போடப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகே, குழந்தையின் விரல் சேர்கிறதா என்பது தெரியவரும் என்றும் கூறினார். குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், செவிலியர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரவிக்குமார் உறுதியளித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: