Home /News /tamil-nadu /

பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்

பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Religious Harmony in Tamil nadu: தஞ்சையில் பங்குனி உத்திரம் விழா அன்று பால் குடத்துடன் சென்ற இந்துக்களுக்காக போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள் சமூக வளைத்தில் வைரலாகும் வீடியோ.

தஞ்சாவூரில்  பால் குடத்துடன் சென்ற இந்துக்களுக்காக போராட்டத்தை நிறுத்தி   இஸ்லாமிர்கள் வழி விட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கல்வி நிறுவனங்களில்  ஹிஜாப் அணிய தடை உத்தரவு செல்லும் என  கடந்த 18ந் தேதி உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  தமிழகம் முழுவதும் போராட்டம்  நடைபெற்றது. இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அன்று  பங்குனி உத்திரம் என்பதால் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருந்தன. இதேபோல் அப்பகுதியில் உள்ள  முருகன் கோவில் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குடும், காவடி எந்திகொண்டு வந்து கொண்டிருந்தனர்.



Also Read: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அதனை புரிந்து கொண்டு இஸ்லாமியர் கோஷமிடுவதை நிறுத்தி கொண்டு, ஊர்வலம் எளிதாக செல்லுவதற்கு மனித சங்கிலி அமைத்து, பக்தர்களுக்கு எந்த இடையூறும் இன்றி இஸ்லாமிர்கள் கரம் கோர்த்து சாலையின் இருபக்கமும் நின்றனர். பக்தர்கள் கடந்த சென்ற பிறகு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த வீடியோனது சமூக வலைதளத்தில் தற்போது  வைரலாகி வருகிறது.
Published by:Ramprasath H
First published:

Tags: Hijab, Hindu, Muslim, Protest

அடுத்த செய்தி