ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புதுமாப்பிள்ளைக்கு புத்தகங்களை சீதனமாக வழங்கி அசத்திய நண்பர்கள்.. இது வேற லெவல் ஃப்ரெண்ட்ஷிப்...

புதுமாப்பிள்ளைக்கு புத்தகங்களை சீதனமாக வழங்கி அசத்திய நண்பர்கள்.. இது வேற லெவல் ஃப்ரெண்ட்ஷிப்...

புத்தகம்

புத்தகம்

Tanjore | அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை செண்டை மேளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை தட்டில் வைத்து சீர் கொண்டு வந்த வழங்கிய நண்பர்கள்.

வழக்கமாக திருமணத்திற்கு முதல் நாள் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யும் போது பழம், புடவை நகை பணம் உள்ளிட்டவை சீதனமாக வழங்கப்படுவது வழக்கம், ஆனால் தஞ்சையில் காவல்துறையில் பணிபுரியும் தங்களது நண்பனின் திருமணத்திற்கு செண்டை மேளத்துடன் புத்தகங்களை சீதனமாக வழங்கி நண்பர்கள் அசத்தியுள்ளனர். தஞ்சை மகர்நோன்பு சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவலர் மோகன்குமார், இவருக்கும் சாமுடீஸ்வரி என்பவருக்கும் தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Also Read:  ஊருக்கு தான் உபதேசமா?.. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

இந்நிலையில் மோகன் குமாரின் நிச்சயதார்த்தத்திற்கு பால்ய சினேகிதர்கள் திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை செண்டை மேளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர். இதனை சீதனமாக பெற்றுக்கொண்ட மோகன்குமார் தெரிவிக்கையில் தனது பள்ளியில் தன்னுடன் பயின்ற நண்பர்கள் புத்தகங்களை சீதனமாக வழங்கியது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

First published:

Tags: Book reading, Bride tips, Police, Tanjore