• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Farmers : மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை விவசாயிகள் வரவேற்பு

Farmers : மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை விவசாயிகள் வரவேற்பு

செந்தில் விவசாய தொழிலாளர் சங்கம் - மேட்டூர் அணை

செந்தில் விவசாய தொழிலாளர் சங்கம் - மேட்டூர் அணை

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இருப்பதை வரவேற்பதாகவும், ஆனால் இந்த அறிவிப்பு பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
தஞ்சசாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தஞ்சை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதிபெறும்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில், தூர் வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த அறிவிப்பு என்பது பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் விவசாயிகள், குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் நிபந்தனைகளின்றி அனைத்து வங்கிகளிலும் விவசாய கடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் கொரோனா காலத்தில் சிறு குறு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால தாமதம் ஏற்படுத்தாமல் கடன் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Must Read : மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 6 முக்கிய அறிவிப்புகள்

மேலும் மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு, விதைநெல் தட்டுப்பாடுகள் அதிக அளவில் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதனை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் - எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: