சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் குடும்பத்தினரை தொடர்ந்து, திமுகவினரும் தங்களை மிரட்டுவதாக நிலத்தை பறிக்கொடுத்த பாதிக்கப்பட்ட தம்பதி புகார்.
தஞ்சையில் ஜெராக்ஸ் கடை வைத்து தொழில் செய்து வரும் மனோகர் - வளர்மதி தம்பதியருக்கு சொந்தமான நிலம் திருவையாறை அடுத்துள்ள ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் உள்ளது. 460 தென்னை மரங்கள், 63 மாமரங்கள், 60 தேக்கு மரங்களையும் 4 ஆழ்குழாய் இணைப்பு வசதி கொண்ட 4. 84 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் அடி ஆட்களை வைத்து மிரட்டி 2009 ஆண்டு 65 லடசம் ரூபாய்க்கு எழுதி வாங்கியுள்ளனர்.
சுந்தரவதனம் பெயருக்கு, நிலத்தை பத்திரப்பதிவு செய்த நிலையில், வெறும் 7 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாற்றியதால், தம்பதியர் பணத்தை திருப்பி கொடுத்து நிலத்தை கேட்டுள்ளனர். ஆனால் நிலத்தை ஒப்படைக்கவில்லை, இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் 2019 வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் ஏமாற்றி நிலம் வாங்கியது தெளிவாக இருப்பதால் மனோகர் பெயருக்கே பட்டாவை மாற்ற வேண்டும் என வருவாய்துறைக்கு உத்தரவிடப்பட்டது
இதுவரை கிராம நிர்வாக அதிகாரி மாற்றாமல் அலைக் கழிப்பதாகவும் கூறும் மனோகர், வழக்கு நிலுவையில் உள்ள போது, சுத்தரவதனத்தின் மகன் வெங்கடேஷ் பாரி என்பவருக்கு விற்றுவிட்டதாகவும் கூறுகிறார். பாரி உள்ளூர் திமுக நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் விடாமல் கொலை மிரட்டல் விடுவதாக வேதனை தெரிவிக்கிறார். இதனால் அந்த கிராமத்திற்கே செல்ல முடியாமல் 13 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என்று பல தரப்பினரிடமும் புகார் கொடுத்தும்,நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறுகிறார்.
Must Read : டிஜே பார்ட்டி.. டான்ஸ் எல்லாம் காரணமில்லை - மாப்பிள்ளை மாறிய விவகாரத்தில் நடந்தது என்ன?
இது குறித்து மனோகர் கூறுகையில், தற்போது சசிகலா அண்ணன் சுந்தரவதனம் உயிரோடு இல்லாத நிலையில், அவரது குடும்பத்தார் நிலத்தை கொடுக்காமல் தங்களை ஏமாற்றி பாரி என்பவரிடம் விற்றுவிட்டார்.
Read More : கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ1.64 கோடி மோசடி - கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
நிலத்தை வாங்கிய பாரியும், அவரது உறவினர் திமுகவை சேர்ந்த புண்ணியமூர்த்தியும் சேர்ந்து தற்போது மிரட்டுவதாக கூறுகிறார். எனவே தங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மன அளித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.