• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் - அதிரடி காட்டிய தஞ்சை மாநகராட்சி

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் - அதிரடி காட்டிய தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

மே மாதம் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி அதிலிருந்து குத்தகைதாரர்கள் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

  • Share this:
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான  தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள 2.13 ஏக்கர்   நிலத்தை அதிகாரிகள் முன்னிலையில் கையகப்படுத்தப்பட்டது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 2.13 ஏக்கர் நிலத்தில் தனியார்  திரையரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனியன் கிளப் ஆகியவை 100 ஆண்டுகளுக்கு  மேலாக 99 வருட குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி அதிலிருந்து குத்தகைதாரர்கள் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.  மேலும்  மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு முறைப்படி நோட்டீஸ் வழங்கியது.

இந்த நிலையில் இன்று காலை 3 கட்டிடங்களுக்கும் தமிழ்நாடு பொது வளாகங்கள் சட்டம்  1975ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. அதன்படி  ஜுபிடர் திரையரங்கில் முகப்பில் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறுமாறு தனி நபர்கள் யாரும் இந்த சொத்துக்குள் நுழையக்கூடாது என பொது அறிவிப்பை தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோல் காவேரி லாட்ஜ் மற்றும் தஞ்சாவூர் யூனியன் கிளப் முகப்பிலும் பொது அறிவிப்பை தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில்  காவல்துறையினர் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் விரைவில் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர். தற்போது கையகப்படுத்தப்பட்டு இடத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: