Home /News /tamil-nadu /

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன்பதிவு விவசாயிகள் கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன்பதிவு விவசாயிகள் கண்டனம்

நெல் கொள்முதல்

நெல் கொள்முதல்

மூன்று வேளாண் சட்டங்களை மாநில அரசு எவ்வாறு எதிர்த்ததோ, அதேபோல் ஆன்லைன் பதிவு முறையையும் பின்பற்ற கூடாது என விவசாயிகள் கோரிக்கை.

கொள்முதல் நிலையங்களில், ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு,  தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த குறுவை பருவத்தின் போதும், ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் மூலமும், பழைய முறைப்படியும் நெல்லை கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தது. தற்போது திடீரென்று சம்பா, தாளடி பயிர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே  முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியாக இருப்பதாகவும்,  விவசாயிகள் இதன்மூலம் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதால், முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட நாளில் முன்பதிவு செய்துவிட்டு, அந்த நாளில் மழை, வேறு இயற்கை இடையூறுகள் ஏற்பட்டால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும், அப்போது  மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும், இதனால் காலதாமதம் ஏற்பட்டு நெல்மணிகள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.

Also Read:  கிருஷ்ணகிரி அருகே சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்கூட்டியே அறுவடை செய்துவிட்டால், பதிவு செய்த நாளுக்காக காத்திருக்க கூடிய சூழல் ஏற்படும், அப்போது  நெல்லை பாதுகாப்பது, விளைநிலங்களில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்வது, மீண்டும் வீட்டில் இருந்து கொள்முதல்  நிலையத்திற்கு எடுத்துச் செல்வது என இரட்டிப்பு செலவு ஏற்படும், நெல்மணிகளை அறுவடை செய்து வீட்டில் வைப்பதற்கு போதுமான இடவசதிகளும் இல்லாததால்,  விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தாலும், மாநில அரசு அமல்படுத்த கூடாது.  உழவர் திருநாளுக்கு, இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், விவசாயிகளின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், பழைய முறைப்படியே சம்பா, தாளடி பயிர்களை பொங்கலுக்குள் கொள்முதல் செய்தால் மட்டுமே, பொங்கலை இனிப்பாக விவசாயிகள் கொண்டாட முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Online purchase, Paddy fields, Thanjavur

அடுத்த செய்தி