மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை தபால் நிலையம் முன்பு கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கர்நாடக அரசுக்கும் எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, கர்நாடக அரசு அணை கட்ட நிதி ஒதுக்கியது என்பது, சட்டத்திற்குப் புறம்பானது, ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Must Read : குமரி மீனவர்களின் படகை அத்துமீறி சிறை பிடித்த கேரள மீன்வளத்துறை அதிகாரிகள்
இந்தப் போராட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.