Home /News /tamil-nadu /

ஹாஸ்டலில் கடுமையாக வேலை வாங்கியதாக கூறி மாணவி தற்கொலை.. வார்டன் கைது

ஹாஸ்டலில் கடுமையாக வேலை வாங்கியதாக கூறி மாணவி தற்கொலை.. வார்டன் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில், ஹாஸ்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லி வார்டன் கட்டாயப்படுத்தியதால் பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் 17 வயது சிறுமி . கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லாவண்யாவை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ஆம் வகுப்பில் சேர்த்திருந்தனர்.

12ஆம் வகுப்பில் படித்து வந்த அந்த மாணவி, அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களிடம் அந்த மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Read More : கும்பகோணத்தில் தயாராகிறது பிபின் ராவத் ஐம்பொன் சிலை : டெல்லியில் நிறுவ திட்டம்

இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர். மேலும் மாணவி தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறத்தியதாகவும், ஆனால் நான் மாறததால் தொடர்ந்து தன்னை கடுமையாக திட்டியதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

Must Read : லாரி மோதி பெரியார் சிலை சேதம் : திமுகவினர் போராட்டம்

இதுகுறித்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Suresh V
First published:

Tags: Ariyalur, Student Suicide

அடுத்த செய்தி