Home /News /tamil-nadu /

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

மரகதலிங்கம்

மரகதலிங்கம்

தஞ்சாவூரில் மீட்கப்பட்ட மரகத லிங்கம், 2016 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கோயிலில் இருந்து காணாமல் போனது என கூறப்படுகிறது.

  • 1 minute read
  • Last Updated :
    தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை, உரிய கோயிலிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியில் வசிக்கும் ஒருவர், தொன்மையான சிலைகளை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சாமியப்பன் என்பவரின் மகன் அருண் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன்னிடம் ஒரு மரகத லிங்கம் இருப்பதாகவும், அதை வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் கூறினார். அந்த மரகத லிங்கம் தனது தந்தை மூலம் கிடைத்ததாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் யாரிடம் இருந்து பெற்றார் என்பதோ, அதுகுறித்த ஆவணங்களோ இல்லை எனவும் கூறினார். இதையடுத்து, தொன்மையான மரகத லிங்கத்தை மீட்ட போலீசார், சென்னை கொண்டு வந்தனர். மேலும், தஞ்சாவூரில் மீட்கப்பட்ட மரகத லிங்கம், 2016 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கோயிலில் இருந்து காணாமல் போனது என கூறப்படுகிறது.

    Also Read : பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை... கொரோனா ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    இந்நிலையில், சென்னை அசோகர் நகரில் உள்ள அலுவலகத்தில் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, தஞ்சையில் மீட்கப்பட்ட மரகத லிங்கம், எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்யும் நோக்கில் தீவிர விசாரணைமேற்கொண்டு வருவதாக கூறினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tanjore

    அடுத்த செய்தி