ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோணங்கடுங்கலாறு உடைப்பு 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

கோணங்கடுங்கலாறு உடைப்பு 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

பயிர்கள் நீரில் மூழ்கின

பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம், நாகத்தி பகுதியில் உள்ள கோணங்கடுங்கலாற்றங்கரை உடைந்து, சுமார் 2000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. வடிகால் வாய்கால்களை முறையாக தூர்வாராததே உடைப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை அருகே நாகத்தி பகுதியில் உள்ள கோணங்கடுங்கலாறு வடிகால் வாய்க்கால் உடைந்து.

இதனால், விளைநிலங்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அடுத்தடுத்தடுத்து இடங்களில் உடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் வாய்காலில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடிகால் வாய்கால்களை முறையாக தூர்வாராததே உடைப்பு ஏற்படுவதாகவும், எனவே முறையாக தூர்வார வேண்டும், மழைநீரில் மூழ்கிய பயர்கள் அனைத்தும் அழுகிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அப்பகுதிகளில் மணல் மூட்டைகளை கொண்டு அடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு 10,000 ஹெக்டர் நீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் வடிந்தால் மட்டுமே எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அவர், கரம்பயம், காட்டுக்கோட்டை, திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்களை பார்வையிட்டு விவசாயிகனிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய கனமழை பெய்துள்ளது. 60 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதால், சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. இன்னும் மூன்று நான்கு நாட்களில் தண்ணீர் வடிய வில்லை என்றால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Must Read : வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என கணிப்பு

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட  நிவாரண தொகையை உயர்த்தி வழங்கவும் கேட்டுள்ளனர்.  இது குறித்து தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Published by:Suresh V
First published:

Tags: Delta district crops, Man soon Rain, Thanjavur