தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இயங்கி வருகிறது, இந்த சபாவில் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சுதர்சன சபா கடந்த காலங்களில்
திமுக பிரமுகர் ராமநாதன் என்பவருக்கு 100 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட்டுள்ளது.
நாளடைவில் அந்த சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை ஆகியவை தனியாரால் கட்டப்பட்டு அவை அனைத்தும் உள் வாடகைக்கு விடப்பட்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் கட்டவில்லை, இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கையின் பேரில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975 ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
Must Read : ‘பாஜகவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கூறுகிறார் சீமான்...’ கூண்டோடு ராஜினாமா செய்து திமுகவில் இணைந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் மதிப்பு தற்போது சுமார் 100 கோடி இருக்கும் என தெரிய வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.