ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது, வழக்கை சந்திக்க வேண்டும், அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம், தேர்தல் வெற்றி தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு. நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை.
Also Read: மதுரை பொங்கல் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜனவரி 12-ல் தமிழகம் வருகை..
நோய்தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் போது, அதே நேரத்தில் பரவலை தடுப்பதற்காக அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதல்வரே தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களில் நாலாயிரம் ஐயாயிரம் பேரைக் கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
Also Read: தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்.. தீர்த்துக்கட்டிய காதலி - நடந்தது என்ன?
மேலும் பேசியவர் மக்களுடைய மறதிதான் தி.மு.க-வின் மூலதனம், எதையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ, அதை எல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அது தான் அரசியல்வாதிக்கு அழகு. ஆளுநருக்கு முன்பு கருப்புக்கொடி காட்டி கோ பேக் மோடி என ட்ரெண்டாகி கொண்டிருந்தது. தற்போது வெல்கம் மோடி என்பது ட்ரெண்டாகி கொண்டுள்ளது. ஸ்டாலினின் விடியல் அரசாங்கம் சாயம் வெளுத்துவிட்டது என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, DMK, Omicron, Rajendra balaji, Tamil News, TTV Dhinakaran