Home /News /tamil-nadu /

கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி.. இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது!

கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி.. இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது!

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தினம் தினம் காதல் ஜோடிகள் இங்கே எல்லை மீறுகிறார்கள். காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தினம் தினம் காதல் ஜோடிகள் இங்கே எல்லை மீறுகிறார்கள். காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தினம் தினம் காதல் ஜோடிகள் இங்கே எல்லை மீறுகிறார்கள். காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.

கும்பகோணத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க சகல ஏற்பாடுகளுடன் வந்த இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள் காதலர் தினத்தை தான் எதிர்க்கிறோம். மேற்கத்திய கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்கிறார்கள். இதுபோன்ற திருமணங்களால் மன முறிவு ஏற்படுகிறது.

Also Read : தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

இப்படி இருக்க, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தினம் தினம் காதல் ஜோடிகள் இங்கே எல்லை மீறுகிறார்கள். காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்று ஈடுபடுகிற காதல் ஜோடிகளுக்கு நாங்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறோம்.

அதற்காக மாங்கல்யம் மாலை சீர்வரிசை பொருட்களுடன் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் கோஷமிட்டபடி திருமண சீர்வரிசை பொருட்களுடன் கோயிலுக்கு வந்த நிர்வாகிகளை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் பாலா அளித்த பேட்டியில் கூறியதாவது,  நாங்கள் வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூங்காவிற்கு வருகை தந்து காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்- விஜயதாரணி

காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். ஏனோ இன்றைக்கு மட்டும் தான் காவல்துறை இங்கு வந்து காதல் ஜோடிகளைப் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.

இதுபோன்று மற்ற நாட்களிலும் காதல் ஜோடிகளை அனுமதிக்கூடாது. இதற்கு காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இங்கு சிறப்பு காவல்படை அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Hindu Makkal Katchi, Valentines day

அடுத்த செய்தி