Home /News /tamil-nadu /

பெண்ணை கேவலமாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

பெண்ணை கேவலமாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

Udhayanidhi Stalin : நகை கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தரம் தாழ்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தஞ்சை வந்த அவர் 51 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் குமார் ராஜாவுக்கு அவர் வாக்கு சேகரித்தார்.அப்போது, அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை பாஜக நிர்வாகிகள் உடன் இணைந்து பொன்.ராதாகிருஷ்ணன் தூய்மை செய்யும்  பணியில் ஈடுபட்டார்.

பின்னர் மானம்புச்சாவடி பகுதியில் கொட்டும் மழையில் குடைபிடித்து நின்ற பொது மக்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.



Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும். தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகை கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமாக கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: BJP, Local Body Election 2022, Pon Radhakrishnan, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி