Home /News /tamil-nadu /

மண்ணை சாப்பிட்டு எலும்பும் தோலுமாக மாறிய மூதாட்டி.. சொத்துக்காக பூட்டிவைத்து மகன்கள் செய்த கொடூரம்

மண்ணை சாப்பிட்டு எலும்பும் தோலுமாக மாறிய மூதாட்டி.. சொத்துக்காக பூட்டிவைத்து மகன்கள் செய்த கொடூரம்

எலும்பும், தோலுமாக தாயை வீட்டுக்குள் அடைத்த மகன்கள்

எலும்பும், தோலுமாக தாயை வீட்டுக்குள் அடைத்த மகன்கள்

Thanjavur District | பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த இரண்டு மகன்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த இரண்டு மகன்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

தஞ்சாவூர் காவிரி நகரைச் சேர்ந்தவர் ஞானஜோதி ( வயது 62). இவரது கணவர் திருஞானம் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஞானஜோதியின் மூத்த மகன் சண்முகசுந்தரம், சென்னையில் காவல் தொழில் நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் தொலைக்காட்சி நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக, இரண்டு மகன்களும் ஞானஜோதியை ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். போதிய உணவு,  தண்ணீர், ஆடை இல்லாமல், எலும்பும், தோலுமாக மாறிய ஞானஜோதி, வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று வந்துள்ளார்.



இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, 'வாட்ஸ் ஆப்' பில் புகார் அனுப்பியுள்ளார். இதையடுத்து, 14ம் தேதி இரவு சமூக நலத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா ஆகியோர், ஞான ஜோதியை பூட்டிவைத்திருந்த வீட்டில் இருந்து மீட்டனர்.

இதையும் படியுங்கள் : மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ
 இதுதொடர்பாக தமிழ் பல்கலைகழக போலீசில், விமலா புகார் அளித்தார்.  இதன்பேரில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ், பெற்ற தாயினை பராமரிக்காமல் இருந்த இரண்டு மகன்களின் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Thanjavur

அடுத்த செய்தி