Home /News /tamil-nadu /

தேர் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தேர் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி இரங்கல்

Thanjavur chariot accident: தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் நினைவுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூரில் தேர் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில்.  அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலும் ஒரு சிறுவன் மருத்துவமனையிலும் என இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.



    இந்நிலையில், தஞ்சாவூர் தேர் விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் நினைவுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன.

    மேலும் படிக்க: 11 பேரை பலிகொண்ட தஞ்சை தேர் விபத்துக்கு இது தான் காரணம் - உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு!!

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Accident, PM Narendra Modi, Thanjavur

    அடுத்த செய்தி