• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாக்கு மேடையை இடிக்க மக்கள் எதிர்ப்பு...

தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாக்கு மேடையை இடிக்க மக்கள் எதிர்ப்பு...

Youtube Video

தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாக்கு மேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் சுமார் 10 அடி உயரம், 200 அடி நீளம், 30 அடி அகலத்தில் உள்ளது தூக்குமேடை. 200 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியர் மன்னர்கள் காலத்தில் செங்கல், சுண்ணாம்பும், கருங்கல் கலவை மூலம் அமைக்கப்பட்ட இந்த தூக்கு மேடை, தஞ்சையின் ஒரு வரலாற்று பொக்கிஷமாக நின்று கொண்டிருக்கிறது.

    தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டிடங்களோடு எஞ்சியுள்ள இந்த தூக்கு மேடையை தஞ்சை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் ராஜா போன்ஸ்லேவின் தம்பி சிவாஜி போன்ஸ்லே இடித்துவிட்டு, இந்த இடத்தை விற்க போவதாக தகவல் பரவியது. இதை அறிந்து வரலாற்று பொக்கிஷத்தை காக்க களமிறங்கிய பொதுமக்கள், கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    மேலும் படிக்க...இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 23, 2021)

    இதனிடையே, அங்கு வந்த பெரியகோயில் மீட்புக்குழு பொருளாளர் ராஜேந்திரன், இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார். கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட இந்த தூக்கு மேடையை, இப்போது இடிக்கும் குற்றத்தை யாரும் செய்து விடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: