ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இரவிலும் ஆய்வு செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இரவிலும் ஆய்வு செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கானூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இரவில் ஆய்வு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சொக்கானூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் இரவிலும் ஆய்வு செய்தனர்.

அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள்  மற்றும் பயிர்களை பார்வையிட்டனர். விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். நேற்று காலை கடலூரில் ஆய்வைத் தொடங்கிய ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, இறுதியாக தஞ்சையில் இரவிலும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினர்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று மாலை தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்களிடம் விவசாயிகள் அழுகிய நிலையில் உள்ள பயிர்களை பிடுங்கி காண்பித்து வேதனை தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் எடுத்துரைத்தார்.

அப்போது, கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 175 குடும்பத்தினருக்கு  அரிசி, பாய் போர்வைகள் அடங்கிய தொகுப்பினை நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

Must Read : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

அப்போது, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பாரதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சக்தி உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Suresh V
First published:

Tags: Delta district crops, OPS - EPS, Rain water