அலுவலகத்தில் இருந்தப்படியே மின்சாரத்தை துண்டிக்கும் நவீன சாதனம்... கல்லூரி மாணவிகள் அசத்தல்

Youtube Video

அலுவலகத்தில் இருந்தபடியே மின் இணைப்பைத் துண்டிக்கும் மற்றும் மின் இணைப்பு வழங்கும் வகையிலான புதிய மின்னணு சாதனத்தை தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா பரவலின் இரண்டாவது அலை, இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் அவர்களை காப்பாற்றும் நோக்கத்தில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவிகளான சுபத்ரா, சப்ரின் மற்றும் பிரபா ஆகியோர், புதிய மின்னணு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

  ஸ்மார்ட் பவர் டிஸ்ட்ரிபியூஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின்னணு சாதனத்தின் மூலம், மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பைத் துண்டிக்கவும் அல்லது மின் இணைப்பை கொடுக்கவும் முடியும் என்று கூறுகின்றனர் மாணவிகள்.  மேலும் பயனாளர்களின் மின்சார உபயோகத்தை கணக்கெடுத்து, அந்த கட்டணத்தை அவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வகையிலும் இந்த சாதனத்தை மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.

  மேலும் படிக்க... புதுக்கோட்டை: ஜில் ஜில் கோடை மழையால் வெப்பம் தணிந்தது

  தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் மின்வாரிய ஊழியர்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் எனவும் மாணவிகள் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: குருநாதன், தஞ்சாவூர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: