குளியலறையில் வெப்கேமரா வைத்து பெண்கள் குளிப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

தஞ்சையில் கைதான நசீர் அகமது,

குளியலறையில் வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  • Share this:
வெப்கேமராவை பவர்பேங்குடன் பக்கத்து வீட்டின் குளியலறையில் வைத்து பெண்கள் குளிப்பதை பார்த்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் கைது.

தஞ்சாவூர் தெற்குவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர்   அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

Also Read:  நள்ளிரவில் கண்விழித்த பெண்.. பீரோ அருகில் நின்ற உருவம் - ஷாக்கான பெண்

உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது(35) என்பரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வெங்கடேஷன் கூறுகையில் எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது, திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை, மாடியில் இருந்து பார்த்தார். இது குறித்து அவர் தந்தையிடம் சொன்ன போது, எங்களிடம் சண்டைக்கு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் எனது வீட்டின் பின்புறம் குளியலறை உள்ளது. குளியலறையொட்டி இன்னொருவருக்கு சொந்துமான காலி வீடு உள்ளது. அந்த வீட்டின்  உரிமையாளர், வீட்டை பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டை சுற்றி காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமது கொடுத்துள்ளனர்.

Also Read: இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்ற லாரி க்ளீனர் - போக்சோ சட்டத்தில் கைது

இதனைப்பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை பார்த்துள்ளார். தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: