தஞ்சை அருகே கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி மாட்டு வண்டி பந்தயம்; ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்பு!

மாட்டு வண்டி பந்தயம்

இந்த போட்டியில் ஏராளமான இளைஞர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • Share this:
தஞ்சாவூர் அருகே கொரோனா தடை உத்தரவையும் மீறி நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தளர்களற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர, பொது போக்குவரத்து அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடை உத்தரவுகளை பின்பற்றாமல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கல்லணை - அகரபேட்டை பிரதான சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் ஏராளமான இளைஞர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து, கொரோனாவின் தீவிரத்தை உணராத சிலர் இதுபோல் ஈடுபடுவது மேலும் நோய் பரவ காரணமாக அமையும்  என  சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இது போன்று அரசின் உத்ரவுகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: