ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம், பொங்கல் போனஸ் வழங்கவில்லை - மடியேந்தி பிச்சை எடுத்து போராட்டம்!

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம், பொங்கல் போனஸ் வழங்கவில்லை - மடியேந்தி பிச்சை எடுத்து போராட்டம்!

மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் எங்களை வஞ்சிக்குமானால்  நாங்கள் எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, சம்பளம், பொங்கல்  போனஸ் வழங்கவில்லை என்று கூறி 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை என்றும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு   EPF வருங்கால வைப்புத்தொகையையும் நகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செலுத்தாமல்  வஞ்சித்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also read... கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது - ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!

இதனால் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம்  கிடைக்கவில்லை,  பொங்கல் போனஸ்  வழங்கவில்லை என குற்றம்ச்சாட்டி, பட்டுக்கோட்டை நகராட்சியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read... கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை - விவசாயிகள் வேதனை!

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் எங்களை வஞ்சிக்குமானால்  நாங்கள் எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Protest