பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு... கழிவறை சுத்தமில்லை என அதிகாரிகளை கடிந்த எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ அன்பழகன்

கழிவறையை அன்றாடம் சுத்தம் செய்யாமல் நோய் பரப்பும் வகையில் சுகாதாரம் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வைத்துள்ளதாக கடுமையாக சாடினார்.

  • Share this:
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கழிவறை சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் நகராட்சி அதிகாரிகளை எம்எல்ஏ அன்பழகன்  கண்டித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில், ஆய்வு செய்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் அங்குள்ள நகராட்சியின் இலவச கழிவறையை பார்வையிட்டார்.  அப்போது கழிவறை மிகவும் துர்நாற்றம் வீசியதோடு, சுகாதாரம் இன்றியும், தரை தளங்கள் உடைந்தும் மற்றும் மேல் கூரைகள் இடிந்தும் காணப்பட்டது.

Also Read : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பயணிகள் எம்எல்ஏவிடம் பேருந்து நிலையம் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், முறையாக சுத்தம் செய்வதில்லை எனவும் கழிவறை மிகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளே வரவைத்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முன்பு கண்டித்தார்.

Also read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வரும் இச்சூழலில் பேருந்து நிலைத்தில் கழிவறையை அன்றாடம் சுத்தம் செய்யாமல் நோய் பரப்பும் வகையில் சுகாதாரம் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வைத்துள்ளதாக கடுமையாக சாடினார். இன்னும் ஓரிரு நாட்களில் கழிவறை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டுமெனவும் அதனை தான் வந்து மீண்டும் ஆய்வு செய்வேன் எனவும் காட்டமாக தெரிவித்துச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: