• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிலம்பம் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு அரசாணை எப்போது வெளியாகும் : அமைச்சர் விளக்கம்

சிலம்பம் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு அரசாணை எப்போது வெளியாகும் : அமைச்சர் விளக்கம்

அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி

“இல்லம் தேடி கல்வி” திட்டத்தில் பயிற்சி அளிக்க ஒரு லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.

  • Share this:
பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை  இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேர இதுவரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ள நிலையில், மேலும் ஆர்வமுடையவர்கள் பதிவு செய்து இந்த இயக்கத்தில் சேர முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்  சுற்றுச்சூழல் இளைஞர்நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சை சமுத்திரம் ஏரி அருகே உள்ள பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அதனை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி .கே. ஜி. நீலமேகம், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு  இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், எக்காரணம் கொண்டும் நேரடியாக ஆறுகளில் கழிவுநீர் கலக்கக் கூடாது, சுத்திகரிக்கப்பட்டு பின்னர்தான்  ஆற்றில் விடுவேண்டும் என அறிவுத்தியுள்ளோம். இன்னும் ஆறு மாத காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் திமுக தேர்தல் அறிக்கையில்  அறிவித்தவாறு பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு  ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில்,  வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை இன்னும் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் சிலம்பம்  குறித்த பாடப்பிரிவுகளை சேர்க்கவும்,  பல்கலைக்கழக அளவில் சிலம்பத்தை கொண்டு செல்லவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து  வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்படும், கற்றலில் இடைவெளி ஏற்பட்ட  காரணத்தினால் மாணவர்கள்  ஒழுக்க நெறியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகதான்  துவங்கப்படுகிறது.  விருப்பமுடைய மாணவர்கள்  பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Must Read : திருவாரூரில் கனமழையால் தியாகராஜர் கோவில் கமலாலயக் குளக்கரை இடிந்து விழுந்தது - போக்குவரத்து நிறுத்தம்

கற்றல் குறைபாட்டை  சரிசெய்யும் விதத்தில்  கொண்டு வரப்பட்டுள்ள “இல்லம் தேடி கல்வி” திட்டத்தில் பயிற்சி அளிக்க ஒரு லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில்,  இதுவரை  50 ஆயிரம்  தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர், மேலும், விருப்பமுடைய தன்னார்வலர்கள்  முன்வந்து பதிவு செய்து கொள்ளவும் 1ஆம் தேதி முதல்  இந்தத் திட்டம் துவங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: