தஞ்சை வடக்கு வீதியின் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு பின்புறம் மர்ம நபர்கள் வீசிச் சென்ற நிலையில், அதனை போலிசார் மீட்டு மீண்டும் அதே இடத்தில் சிலையை வைத்தனர்.
தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி நான்கடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் இரண்டு அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிலையின் அருகே டீக்கடை ஒன்று உள்ளது. இரவு டீ கடைக்காரர் கடையை சாத்திவிட்டு மீண்டும் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்தபோது அருகில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து அதிமுகவினருக்கு தகவல் தெரிய வர சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவினர் காணாமல் போன எம்.ஜி.ஆர் சிலையினை அக்கம்பக்கத்தில் தேடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தெற்கு காவல் துறையினரும் அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், அருகே இருந்த பெட்டிக் கடையின் பின்புறம் எம்.ஜி.ஆர். சிலை கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது தற்போது அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையை பெயர்த்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Must Read : கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ1.64 கோடி மோசடி - கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
சிலை சேதப்படுத்தத்தப்பட்டது குறித்து ட்விட்டரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில், ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்,1/2 pic.twitter.com/tSEwfdnL9M
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 25, 2022
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi Palaniswami, MGR