Home /News /tamil-nadu /

4 ஆண்டுகளுக்கு பின் மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் வெட்டிப்படுகொலை.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..

4 ஆண்டுகளுக்கு பின் மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் வெட்டிப்படுகொலை.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..

கொலை செய்யப்பட்ட இளையராஜா

கொலை செய்யப்பட்ட இளையராஜா

Cuddalore: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரிந்த மனைவியை, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பார்க்க வந்த கணவர் மாமியார் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 35) கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கீழத் தெருவை சேர்ந்தவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவுக்கும்  அனிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனுஹாசினி (10) என்ற மகளும், நிரஞ்சன் (7) என்ற மகனும் உள்ளனர்.

    Also Read: இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்களை பதிவேற்றிய பெண்.. நண்பர்கள் மூலம் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்..

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம்  இளையராஜா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மனைவி அனிதாவை பார்ப்பதற்காக நெய்வாசல் வந்துள்ளார். மேலும் இரவு மனைவி அனிதா வீட்டிலேயே தங்கியுள்ளார்.

    இந்நிலையில் காலை இளையராஜா  இல்லாததை கண்ட அவரது  மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது   அனிதாவின் வீட்டு கொல்லைப்புறத்தில்இளையராஜா உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதை  கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    Also Read: விஷப்பாம்பை வைத்து வித்தை.. கல்லா கட்டும் மூதாட்டி- பரபரப்பு வீடியோ

    இதனையடுத்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில்  பந்தநல்லூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து  பந்தநல்லூர் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து  இளையராஜா மனைவி அனிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Illegal affair, Illegal relationship, Murder, Police, Tanjore

    அடுத்த செய்தி