• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹெல்மெட் போடவில்லை.. கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் ஃபைன் போட்ட போலீஸார் - ஷாக்கான உரிமையாளர்

ஹெல்மெட் போடவில்லை.. கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் ஃபைன் போட்ட போலீஸார் - ஷாக்கான உரிமையாளர்

ஆட்டோ

ஆட்டோ

கும்பகோணத்தில் இருக்கும் பொழுது மதுரையில் ஆட்டோ ஓட்டும் போது ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு, விதிகளை மீறியதாக  மதுரையில் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை. 

    திரைப்படத்தில் வானத்தில் செல்லும் விமானத்திற்காக, சாலையில் போக்குவரத்தை  காவல்துறையினர் நிறுத்தி வைத்திருப்பார்கள், இதைகண்ட நகைச்சுவை நடிகர் விவேக் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை ஆபிசர் என்று நகைச்சுவையாக பேசியிருப்பார். அதுபோல சம்பவம் தஞ்சையில் நடைபெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையின் கடமை உணர்ச்சியால், தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு ஹெல்மெட் போடவில்லை என மதுரையில் அபராதம் காவல்துறை போட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் குருநாதன். இவர் ஒரு ஆட்டோ தொழிலாளி ஆவார். இவர் கடந்த 20 வருடங்களாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக  TN68 L 1374 என்ற ஆட்டோ உள்ளது. கடந்த ஏழு வருடமாக  முறையாக சாலை பர்மிட், எப்சி, வாகன காப்பீடு ஆகியவற்றை முறையாக  பராமரித்து வருகிறார்.

    Also Read: நவராத்திரி விழாவில் 8 மணிநேரம் பம்பை உடுக்கை அடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் சாதனை

    இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு வழக்கம் போல் சவாரி செல்வதற்காக கும்பகோணம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் பொழுது, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும், மேலும்  ஹெல்மெட் போடவில்லை என்றும் ரூபாய் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    கும்பகோணத்தில் இருக்கும் பொழுது மதுரையில் அவருக்கு ஆட்டோ ஓட்டும் போது ஹெல்மெட்  போடாமல் சென்றதற்கும் ஆட்டோவிற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று  அபராதம் விதித்திருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், இது முற்றிலும் பொய்  வழக்காகும். இது காவல்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கேலிக்கூத்தாக இருக்கிறது.

    கொரோனா ஊரடங்கு உத்தரவாலும் பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வால் தொழில் செய்ய முடியாமல் ஆட்டோ தொழிலாளிகள் அன்றாட வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பொய் வழக்குகள் போடுவது கண்டிக்கத்தக்கது.இது தொடர்பாக  புகார் அளிக்க உள்ளோம். இதனை கையாண்ட மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: