Home /News /tamil-nadu /

அடுத்த பிறவியில் வௌவாலாக தான் பிறப்பார்கள் - அரசியல்வாதிகளுக்கு மதுரை ஆதீனம் சாபம்

அடுத்த பிறவியில் வௌவாலாக தான் பிறப்பார்கள் - அரசியல்வாதிகளுக்கு மதுரை ஆதீனம் சாபம்

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

Madurai Adheenam Curse : அரசியல்வாதிகளிடம் ஆதீன சொத்துகள் பல சிக்கியுள்ளதாகவும், அவர்கள் அதனை விற்பதாகவும் குற்றச்சாட்டிய மதுரை ஆதீனம், கோயில் நிலங்களுக்கு முறையாக குத்தகை அளிக்காத அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் வௌவாலாத்தான் பிறப்பார்கள் என்று சாபம் விட்டார்.

மேலும் படிக்கவும் ...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசுவாமி திருக்கோயில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும், இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பிரளயம் காத்த விநாயகர் கிளஞ்சல் மற்றும் நத்தான் கூடு ஆகியவற்றால் ஆன திருமேனி கொண்டவர் இவருக்கு ஆண்டிற்கு ஒருநாள் அதுவும் ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி நாளில் மாலை 6 மணி தொடங்கி, மறுநாள் விடியற்காலை 6 மணி வரை தொடர்ந்து விடிய விடிய தேன் அபிஷேகம் மட்டும் நடைபெறுவது சிறப்பு.

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்திற்கு, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று திருப்புறம்பியம் திருக்கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு ஊர் எல்லையில், ஊர் பொது மக்கள் சார்பில் பட்டாசுகள் கொளுத்தியும், தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோயில் வாசலில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், பிரளயம் காத்த விநாயகர், சாட்சிநாதசுவாமி மற்றும் கரும்படு சொல்லியம்மை ஆகிய சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த குருமகா சன்னிதானம், திருக்கோயில்களின் கும்பாபிஷேகங்கள் தாமதமாவதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான் என்றும், ஆதீன நிலங்கள் பல ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ளது, அதற்காண குத்தகை முறையாக அவர்கள் செலுத்தாததுடன், பல இடங்களில், ஆதீன நிலங்களை விற்பனையும் செய்து மோசடி செய்துள்ளனர். குத்தகை தொகையை கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலாப் பிறப்பார்கள், இதற்கு சரியான சட்டத்திட்டங்கள் இல்லாததே காரணம் என்றும் கூறினார்.

இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் செயல்படுகிறார்கள், அரசியலும், சினிமாவும் அவர்களை பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மாக் செல்கிறார்கள். இதனை தடுக்க அரசு மதுபான கடைகளை மூட வேண்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்வதை இன்றைய இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும், நம் நாட்டிலேயே கல்வி கற்க வேண்டும். சுயதொழில்கள் பல புரிய முன்வரவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

Read More : ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

பெரும்பான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க, போதுமான உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை, ஆனால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிறைய உதவிகளும், சலுகைகளும் வழங்கப்படுகிறது என்றும், தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றிய புண்ணிய பூமி தமிழர்களுக்கு கெடுதல் மற்றும் துரோகம் செய்பவர்கள் அதற்காண பல பலன்களை கண்டிப்பாக அடைந்தே தீருவார்கள் என்றும் கூறினார். மேலும், ஒருகாலத்தில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுடன் கைகோர்த்திருந்தவர்கள் தான் முந்திய மத்திய அரசான ராஜீவ்காந்தி குடும்பமும், இன்றைய உக்ரைன் தேசம், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்பதில், தமிழக அரசும், மத்திய அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Must Read : சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், நான் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆதீன கோயில்களை முறையாக பூஜைகள் நடக்கவும், கோயிலுக்குரிய நிலங்கள், சொத்துக்கள் முறையாக பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். கோயில் கும்பாபிஷேகங்களை தமிழில் செய்வதில் தவறியில்லை. இன்றைய அர்ச்சகர்கள் பலர் வெற்றிலை பாக்கு தரித்துக் கொண்டும், சகல விதமான கெட்டப்பழக்கங்களுடன் உள்ளனர். சுவாமியை தொட்டு பூஜிக்கும் அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியதே, ஓதுவார்கள் இல்லாத கோயிலில்களில் ஓதுவார்களை நியமிக்கும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்றும்  தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, DMK, Madurai Adhinam

அடுத்த செய்தி