• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளை காதலித்த ஆட்டோ டிரைவரை கொலை செய்த தந்தை கைது

மகளை காதலித்த ஆட்டோ டிரைவரை கொலை செய்த தந்தை கைது

கொலையான ஆட்டோ டிரைவர்

கொலையான ஆட்டோ டிரைவர்

16 வயது சிறுமியை காதலித்து வந்த ஆட்டோ ஓட்டுநரை சிறுமியின் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
மகளை காதலித்த ஆட்டோ ஓட்டுனரை குத்தி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்  பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்( வயது 24). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் பக்கத்து ஊரான காமாட்சிபுரம் சாவடி தெருவை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சிறுமியின் தந்தை ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன், பிரபாகரனை பல முறை எச்சரித்துள்ளார். படிக்கிற பெண்ணை விட்டுவிடு என பலமுறை கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பிரபாகரன் இதனை கண்டு கொள்ளாமல் சிறுமியுடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மணிகண்டன் நேற்று மீண்டும் பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Also Read: உன் மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பவா?.. கணவனுக்கு போன் செய்த கால்டாக்ஸி டிரைவர் –அதிர்ச்சியில் உறைந்த பெண்

அப்போது தகராறு முற்றியதையடுத்து, பிரபாகரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன் குத்தியதில் பிரபாகரன் படுகாயம் அடைந்தார். அவரது சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. மேலும்  உடனடியாக இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை மணிகண்டனை திருவிடைமருதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கிற வயதில் ஏற்பட்ட காதலால் தந்தை கொலையாளியாகவும், காதலன் உயிரிழந்த சம்பவமும் கும்பகோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: