காதலுக்கு இடையூறு.. மதுபோதையில் நடந்த கொலை - இளைஞர்கள் கைது

அமரேஷ் - சந்தோஷ்

காதலுக்கு இடையூராக இருந்த நபரை நண்பனின் உதவியுடன் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
காதலுக்கு இடையூறாக இருந்தவரை கொலை செய்த வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் தாய்க்கு தெரியவந்துள்ளது. மகளை கண்டித்த தாய் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகளின் காதல் குறித்து தனது உறவினரான பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் என்பவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். சந்தோஷை அழைத்து கண்டிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து செல்வநாதனும் சந்தோஷை அழைத்து இத்தோடு இந்த காதல் விவகாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கண்டித்துள்ளார்.

Also Read:  பாரத மாதா குறித்த சர்ச்சை பேச்சு.. பாதிரியாரை தொடர்ந்து மேலும் ஒருவர் கைது

இதனையடுத்து செல்வநாதன் மீது சந்தோஷ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். செல்வநாதனை தீர்த்துக்கட்டினால்தான் காதலியை கரம்பிடிக்க முடியும் என நினைத்த சந்தோஷ் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து உதவிக்கு தனது நணபர் பர்மா காலனியை சேர்ந்த அமரேஷ் (23) அழைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் இருவரும் செல்வநாதனை மது அருந்திக்கொண்டே பேசலாம் என தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை இரவு விளார் புறவழிச்சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு பின்புறம் உள்ள திடலில் மூவரும் மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் செல்வநாதனுக்கு போதை தலைக்கு ஏற மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

மயக்க நிலைக்குச் சென்ற செல்வநாதனை இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்யதனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேஷை கைது செய்தனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: