• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசையைத் தூண்டி கோடிகளில் மோசடி.. ஹெலிகாப்டர் சகோதரர்கள் சிக்கியது எப்படி?..

ஆசையைத் தூண்டி கோடிகளில் மோசடி.. ஹெலிகாப்டர் சகோதரர்கள் சிக்கியது எப்படி?..

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள்

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள்

மோசடி சகோதரர்களிடம் பணம் கொடுத்தவர்கள் 75 சதவீதம் பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பணம் கிடைத்தால் போதும் என்று புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

  • Share this:
ஹெலிகாப்டர்  சகோதரர்களுக்கு 15 க்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என  பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால்" அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற பிரபல வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், அதைப்போல் பலபேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன். மேலும் அந்தப் படத்தில், பொதுமக்களை ஏமாற்றுவதற்கு, அவர்களுக்கு தெரிந்தவர்களை வைத்து ஏமாற்றுவது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும், அந்த செயல் முறையை தான் கும்பகோணத்திலும் சகோதரர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களுடைய நிறுவனத்தில் 15க்கும் மேற்பட்ட  ஏஜெண்டுகளை, பல்வேறு பகுதிகளில் நியமித்து, அந்தந்த பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துள்ளனர். கும்பகோணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்வதாக தினமும் பால் கேன்களை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்துள்ளனர். வெளிநாடுகளில் தங்கச்சுரங்கம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதன்மூலம் தங்களை பிரமாண்ட தொழில் அதிபர்கள் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர்.  இதன் மூலம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக தருவதாக கூறி, தங்களது ஏஜெண்டுகள் மூலம் முதலில் சிறு சிறு தொகையை பொதுமக்களிடம் இரட்டிப்பாக கொடுத்துள்ளனர். இதனால் அவர்களின் நிறுவனம் கும்பகோணத்தில் பிரபலமடையத் தொடங்கியது. இதனால் பணத்திற்கு கூடுதல் வட்டி  கிடைப்பதை நம்பி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லட்ச கணக்கில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் ஏஜென்ட்டுகளும் தெரிந்தவர்கள் என்பதால் அதிக பேர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

முதலீடு செய்து ஒரு வருடமாகியும் அசலும் வட்டியும் வராததால் பணம் முதலீடு செய்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். கொடுத்த பணத்தை கேட்டபோது, தான் பா.ஜ.க கட்சியில் இருப்பதாகவும், அமித் ஷாவிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளனர். மேலும் தன்னை பற்றி  புகார் அளித்தால் என்னிடமிருந்து ஒரு ரூபாய் கூட உங்களால் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி சகோதரர்களிடம் பணம் கொடுத்தவர்கள் 75 சதவீதம் பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பணம் கிடைத்தால் போதும் என்று புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான் கும்பகோணத்தை சேர்ந்த பைரோஸ் பானு - ஜபருல்லா தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தன்னிடமிருந்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், திருப்பி கேட்டால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறும் அவர், அதிகாலை 3 மணிக்கெல்லாம் வந்து  ஹெலிகாப்டர்  சகோதரர்கள் பணம் பெற்றதாக கூறுகிறார்.  பல பேர் உயிருக்கு பயந்து, பணம் கிடைக்காது என்று அச்சத்தில், இன்னும் புகார் கொடுக்காமல் உள்ளனர். கும்பகோணத்தில் பல பேர் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட புரோகிதர் சுவாமிநாதன் கூறுகையில், 11 ஆண்டுகள் புகையில் அம்ர்ந்து, பல்வேறு  யாகங்கள் செய்து சிறிது சிறிதாக சேர்க்கப்பட்ட சுமார்  19 லட்சம் பணத்தை முதலீடு செய்ததாகவும், ஆனால் அவர்கள் இப்படி தன்னை ஏமாற்றி விட்டார்கள்  கண்ணீர் சிந்திகின்றனர். தங்களுக்கு வட்டி கூட தேவையில்லை, நாங்கள் முதலீடு செய்த பணம் கிடைத்தால் மட்டும் போதும் எனவும், எனவே அரசு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணத்தை பெற்று தரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை காவல துறையினர் சகோதரர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வெங்கடேசன், மீரா, ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் ஆகியோரை மட்டுமே கைது செய்து உள்ளனர். ஆனால் ஏஜெண்டுகள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். அவர்களையும் கைது செய்து முழுமையான விசாரணை வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: