600கோடி மெகா மோசடி.. கும்பகோணத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர் - தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதர்கள்

ஹெலிகாப்டர் சகோதரர்கள்

சொந்தமாக ஹெலிஹாப்டர் வைத்துள்ளனர். பெரும்பாலும் அதில்  வலம் வருவதால் ஹெலிஹாப்டர் சகோதரர்கள் என்றே அவர்களை கும்பகோணம் பகுதியில் அழைக்கின்றனர்

  • Share this:
கும்பகோணத்தில் நிதி நிறுவனம்  நடத்தி பிரமாண்டமாக வலம் வந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் ரூ 600 கோடி மோசடி செய்துவிட்டதாக கும்பகோணம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள்.சொந்தமாக ஹெலிகாப்டர்  வைத்துள்ளனர். பெரும்பாலும் அதில்  வலம் வருவதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றே அவர்களை கும்பகோணம் பகுதியில் அழைக்கின்றனர்.விக்டரி என்ற பெயரில் சிட்பண்ட்,கிருஷ் பால்பண்ணை உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அவை இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என்ற அறிவிப்புடன் சிட்பண்ட்  நடத்தி வந்தால் இவர்கள் நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் செலுத்தியிருந்தனர்.

Also Read:  ஊரடங்கில் நடந்த மதுவேட்டை.. வழக்கு பதியாமல் சலுகை காட்டிய போலீஸார் - கூண்டோடு சஸ்பெண்ட் செய்த டிஐஜி

இந்நிலையில் துபாய் நாட்டில் விளம்பர நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக்  சேகர் சஞ்ஜெயிடம்  எம்.ஆர். கணேஷ் -எம்.ஆர். சுவாமிநாதன் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி வரை  மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதுடன் ஆட்சியில் உள்ளவர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும் கூறி மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார்.

ஹெலிகாப்டர்


சில மாதங்களாகவே பணம் பெற்ற பலரிடம்  சகோதரரர்கள் பணத்தை திருப்பி தரவில்லை என அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்த  நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள்  நேரடியாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் திருவாரூர் மாவட்டம் மறையூர் அவர்களுடைய பூர்வீக கிராமம் எனவும். ஆனால் அவர்கள் கும்பகோணம் பூர்வீகம் என சொல்லி சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீநகர் காலனியில் செட்டில் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் கும்பகோணம் கொற்கை அருகே கிரிஷ் என்ற பெயரில் வெளிநாட்டு பசு மாடுகளை வைத்து பால் தொழில் செய்து வருவதும், பாலை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும்,அத்துடன் மும்பையில் மருந்து கம்பெனி இருக்கிறது, துபாய், லண்டன் ஆகிய நாடுகளில் தொழில் செய்து வருவதாகவும் எல்லோரிடத்திலும் தங்களை பற்றி  பிரமாண்டத்தை உருவாக்கியுள்ளனர்.

Also Read: தங்கை கணவருடன் தவறான தொடர்பு.. வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்

அத்துடன் விக்டரி என்ற பெயரில்   நடத்திய  நிதி நிறுவனம் மற்றும் அடகு கடையும் அவர்களுடைய அடையாளமாக காண்பித்துள்ளனர். அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம்  செலுத்தினால்  ஆறு மாதத்தில் நான்கு லட்சம் ரூபாயாக திருப்பி தரப்படும் என அறிவித்ததால் கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள்,பொதுமக்கள் என பலரும் அவர்களிடம் லட்ச கணக்கில் பணம் செலுத்தினர். குறிப்பாக பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் பணம் கட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கென சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கினர்.இதற்காக ஹெலிகாப்டர்  இறங்கும் தளம் ஒன்றையும் அமைத்தனர்.பாலை பதப்படுத்தி ஹெலிகாப்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாகவும் கூறி வந்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு அர்ஜுன் ஏவியேசன் என்கிற பெயரில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா செல்வதற்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு விட இருப்பதாக கூறி அதற்கான நிறுவனத்தை பிரமாண்டமாக தொடங்கினர்.சில வருடங்களுக்கு முன்பு கணேஷின் மகன் அர்ஜுனுக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவியதை பார்த்த பலரும் வாயடைத்து போனார்கள். உரிய அனுமதி பெறாமல் ஹெலிகாப்டரை பறக்க விட்டதாகவும் அப்போது சர்ச்சை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பி.ஜே.பி கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.கணேஷிக்கு  பி.ஜே.பியில் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக அணியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி,அமித்ஷா ஆகியோரிடம்  எங்களுக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறி அனைவரையும் கவர்ந்தனர்.

சமீபத்தில்  அப்போதைய பி.ஜே.பி தமிழக தலைவரான  முருகன் மற்றும் முக்கிய நிர்வாகியான கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட சீட் கேட்டு காய்களை நகர்த்தினர் ஆனால் கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் கொரோனா முதல் அலை லாக்டெவுன் போதே பணம் செலுத்தியவர்களுக்கு முறையாக அவர்கள் பணம் தரவில்லை என கூறப்பட்டது. செல்வந்தர்களே அவர்களுடைய சிட்பண்டில் பணம் கட்டியிருந்ததால் யாரும் புகாராக தர முன்வரவில்லை.
இதையடுத்து கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.பணம் கட்டியவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.கொரோனா லாக்டவுனால் பணம் முடங்கிவிட்டது கொடுத்து விடுகிறோம் என கூறி சகோதரர்கள் சமாளித்து வந்தனர். ஆனாலும் பணம் தராததால் கடந்த சில வாரங்களாகவே அவர்கள் பற்றிய பேச்சுக்கள் எழுந்து வண்ணம் இருந்தன.

போஸ்டர்


இந்நிலையில் தான் தற்போது ஜபருல்லா-பைஜோர்பானு என்பவர்கள்  வெளிப்படையாக புகார் அளித்திருந்த நிலையில் கும்பகோணம் நகர் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை ஏமாற்றி ரூ.600 கோடி மோசடி செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என்ற விபரம் குறிப்பிடாததால் அந்த போஸ்டரை ஒட்டி அவர்கள் யார் என்பது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: