தஞ்சாவூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் மனு நிராகரிப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். முன்னணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுடன், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தல் ரேஸில் களமிறங்குகின்றனர். இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் சுயேட்சையாக களமிறங்குகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: “கோமியம் குடிச்சிட்டு தயாரா இருங்க!” ட்விட்டரில் பதிவிட்டு நாடாளுமன்றத்தில் தெறிக்க விட்ட திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா
ஆனால் நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், இதனால் வயதின் காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிக்கத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.