• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகன் மரணத்தில் போலீசார் மீது சந்தேகம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்!

மகன் மரணத்தில் போலீசார் மீது சந்தேகம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கும்பகோணம், சத்திரம்குளத்தில் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாய் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை குறித்து சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

  • Share this:
    கும்பகோணம், சத்திரம்குளத்தில் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாய் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை குறித்து சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த வள்ளி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 9 ஆம் தேதி தனது மகன் சிலம்பரசன் சந்தேகத்துக்குரிய நிலையில் கும்பகோணம் சத்திரம் குளத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்தார்.

    சிலம்பரசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது காவல்துறையினர் அவரை துரத்தியதால் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கும்பகோணம் சத்திரம் குளத்தில் குதித்து தப்பிக்க முயன்று உள்ளார். இதற்கிடையே 9 ஆம் தேதி அன்று குளத்தில் சிலம்பரசன் பிணமாக மிதந்துள்ளார். காவல்துறையினர் தாக்கியதால் சிலம்பரசன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

    இதற்கிடையே காவல்துறையினர் அவசர அவசரமாக சிலம்பரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து எனது கணவரிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளனர். இது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் சிலம்பரசன் உடலில் ரத்த காயங்கள் உள்ளது, இதை மறைத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே புதைத்த சிலம்பரசன் உடலை இரண்டு மருத்துவர்கள் முன்னிலையில் முழுமையாக வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

    மேலும் சிலம்பரசன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொது  வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார்  தரப்பில்  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    செய்தியாளர் - கருணாகரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: