சுடுகாட்டில் நடந்த கொலை.. கள்ளக்காதல் தகராறு.. விசாரிக்கும் காவல்துறை

கொலை - மாதிரி படம்

பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  • Share this:
பேராவூரணி அருகே தவறான தொடர்பு காரணமாக விவசாயி வெட்டிக்கொலை. பெண் உட்பட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் செல்வகுமார் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகி, கணவரோடு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது ஊரான தில்லங்காட்டிலிருந்து செல்வக்குமார் தனது மோட்டார் சைக்கிளில், கறம்பக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, தில்லங்காடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு 7 மணி அளவில் கறம்பக்காடு சுடுகாடு அருகே சென்றபோது மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Also Read:  பியூட்டி பார்லரில் வேலைக்கு வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கண்டித்த மனைவியை கைவிட்ட காதல் கணவன் - நிற்கதியாய் நிற்கும் பெண்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு, ஆம்புலன்சில், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read:  கொடநாடு விவகாரத்தில் மேல் விசாரணைக்கு தடைகோரிய மனு: மூன்று நாட்களில் தீர்ப்பு!

விவசாயி  கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சுதா (38) என்ற பெண்ணுக்கும் செல்வகுமாருக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. மேலும் சுதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுதாவுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம் இந்த கொலையை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் ராமலிங்கம், சுதா இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: