தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு!

தஞ்சையில் தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தமிழக அரசின் இந்த கட்டுப்பாடு உத்தரவுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக பாஜக சார்பில் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை சீனிவாசபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Also read: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

ஆனால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சிலையை கைப்பற்றி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: