விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்காக கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து 30 ஆயிரத்தை கடந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிவரை சமய நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி, விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடற்கரையில் கரைக்கவும் தடை விதித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தரக்குறைவான பதிவு - படிக்காமல் ஃபார்வேர்டு செய்வீர்களா? எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி
அதன்படி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் உச்சி பிள்ளையார் கோவில் முன்பு 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குருமூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kumbakonam, Thanjavur, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி