குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான தென்குடி திட்டையில் சிறப்பு அபிஷேகம். 4 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைவார். அதேபோல் இந்தாண்டு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தென்குடி திட்டையில் அமைந்துள்ள, குரு பரிகார தலமான சுகுந்த குந்தாளாம்பிகை உடனுறை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் மங்கள குருவிற்கு நவதானியங்கள், பழங்கள், பட்டுவஸ்திரங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது.
பின்னர் குருவிற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கடம் புறப்பாடு நடைப்பெற்று புனிதநீர் கொண்டு குருவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட குருவிற்கு சரியாக 6.21 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
Also read:
பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..
கொரோனா பரவல் காரணமாக யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெறும் 4 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு 15 ஆம் தேதி இலட்சார்ச்சனையும், 21ஆம் தேதி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெறுகிறது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் வளாகத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.